திருச்செங்கோட்டில் வெளிச்சம் வாசிப்பு அறக்கட்டளை, R சந்திரசேகர் மற்றும் தமிழ் புத்தக நிலையம் இணைந்து நடத்தும் 3-ஆம் ஆண்டு புத்தக திருவிழா இந்த மாதம் 14.07.2024 முதல் 21.07.2024 வரை மலையடிவாரத்தில் உள்ள விஸ்வகர்மா மண்டபத்தில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், அறிவியல் புத்தகங்கள் உள்ளன. பொதுத் தேர்வு, போட்டித் தேர்வு, அறிவியல் மேதைகளின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. படக்கதை விளக்க புத்தகங்கள், படங்களுடன் கூடிய எழுத்து புத்தகங்கள், ஆத்திச்சூடி உள்ளிட்ட சிறுவர் புத்தகங்கள் அதிகம் இருக்கின்றன. பல முன்னணி எழுத்தாளர்களின் புத்தகங்கள், கவிதை தொகுப்புகள், ஓவியக்கலை, தையற்கலைம் என பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தகங்களுக்கு, 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதை தவிர LKG’லிருந்து 12 வது வரை படிக்கும் மாணவர்களுக்கு “கலரிங், கவிதை, திருக்குறள், ஓவியம், கதை சொல்லல் போன்ற தனித்திறமை போட்டிகள் நடைபெறும். வெற்றி பெரும் மாணவர்களுக்கும், பங்குபெறும் மாணவர்களுக்கும் பரிசு புத்தகங்களும், சான்றிதழ்களும் கடைசி நாளில் வழங்கப்படும்.
200க்கு மேல் புத்தகம் வாங்கும் மாணவ மாணவிகளுக்கு ஒரு உண்டியல் பரிசாக வழங்கப்படும்.
10 % சிறப்பு தள்ளுபடியுடன் முற்றிலும் அனுமதி இலவசம் இந்த வாய்ப்பை வாசகர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.